மீண்டும் தொலைந்து

தொலைந்து போவதே ஒரு வழக்கம்
அன்பில், அழகில் ஒழுக்கத்தில்,
சேவையில், வேலையில்
தொலைந்து கொண்டே இருக்கிறோம்.

மீட்பவரின் கை நீண்டிருந்தாலும்,
 அந்தப் பிடிக்குள்ளேயே
தொலைந்து போகவே விரும்புகிறோம்.

நினைவிலிருந்து அகலும் கணமே,
முன்னால் வந்து "நான் தொலைகிறேன்" என்று
அறிவித்துவிட்டு, மறுபடியும் தொலைந்து விடுகிறோம்.

மற்றவர்களின் நினைவிலிருந்து 
மறைந்து விடக் கூடாது என்பதற்காகவே,
இப்படித் தொடர்ந்து 
தொலைத்துக் கொள்கிறோம்.

Comments

Popular posts from this blog

The Broken Trust: The Hindu's fear

DELIMITATION, THE BJP, AND THE LONG GAME The Southern Pillar: Why the BJP Cannot afford to Betray the South