About Love: Jeyamohan
அன்புடன் கெளதம். பின் குறிப்பு: உங்களுக்கு இது முன்னமே தெரிந்து இருக்கும். உங்களிடம் நூற்றுக் கணக்கானவர்கள் ஒரு உரையாடலில் இருந்துகொண்ட இருக்கிறார்கள் (என்னைப் போல, என் தோழி போல, என் நண்பர்கள் போல). அதனால், இணையத்தில் எழுதுவதைக் குறைப்பதைப் பற்றி மட்டும் நினைக்கவேண்டாம். அது உங்கள் எழுத்துக்கான நேரத்தையும் சச்தியையும் உறிஞ்சும் என்ற உண்மை தெரிந்தும், இந்தக் கோரிக்கையை உரிமையாக வைப்பதில் என்னக்கு எந்த சங்கோசமும் இல்லை. *** அன்புள்ள கௌதம், நீங்கள் குறிப்பிடும் இந்த விஷயத்தை நான் என்னுடைய பதின்பருவத்தில் மிக உக்கிரமாக உணர்ந்திருக்கிறேன். இளமையில் நாம் அறியும் ஓர் வெறுமைக்கான காரணமே இதுதான். நம்மைச்சுற்றி எங்கும் அன்பின் கடல், ஆனால் குடிக்க ஒரு துளிகூட இல்லாமல் வாட்டும் தாகம். என்னுடைய அப்பா அளவுக்கு என் மேல் பிரியம் கொண்டிருந்த எவரேனும் இருந்தார்களா என எனக்குத்தெரியவில்லை. ஆனால் என் அப்பாவிடம் நான் ஒட்டுமொத்தமாக இருபது முப்பது சொற்றொடர்களே பேசியிருக்கிறேன். என்னைஅவர் நாலைந்துமுறைக்குமேல் தொட்டதே இல்லை. நான் அவரைப் புரிந்துகொள்ளும்போது அவர் உயிருடனில்லை. இளமையின் ...