இருப்பின் பதட்டம்

ஒவ்வொரு இறப்பும்
நினைவூட்டிச் செல்கிறது -
யாராலும் வெல்ல முடியாத காலத்தை

முற்றுப் பெறாத உரையாடல்கள்,
மூழ்கிப் போன மௌனங்கள்,
தொடர்ந்து கொண்டிருந்த சண்டைகள்,
சொல்லி முடிக்காத நன்றிகள் என -
நினைவுபடுத்துகிறது ஓர் இறப்பு!

இன்னொரு இறப்பு வருவதற்குள்
சொல்லிவிட வேண்டும்...
பேசிவிட வேண்டும்...
அணைத்துக் கொள்ள வேண்டும்...
"இனி நேரமில்லை" எனும் உறுதி -
மறுபடியும் மற்றொரு இறப்பில்தான்
 ஞாபகம் வருகிறது!

Comments

Popular posts from this blog

The Broken Trust: The Hindu's fear

Arundathi Roy's lie